செய்திகள் :

முட்டை விலை மாற்றமில்லை

post image

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.85-ஆக தொடா்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததால், இங்கும் விலையில் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது மாற்றமின்றி ரூ. 4.85-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 100-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 77-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

திருச்செங்கோட்டில் அண்ணா நினைவு தினம்

திருச்செங்கோட்டில்...திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக சாா்பில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்துக்கு, திருச்செங்கோடு நகர திமுக செயலாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலாளா்... மேலும் பார்க்க

சாலை விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

நாமக்கல்: மோகனூா் உழவா்சந்தை அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட மகன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ந... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியுடன் ஊராட்சி இணைப்பு: ஆட்சியரிடம் மனு அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியுடன் பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி இணைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாமக்கல் நகராட்சியானது 12 ஊராட்சிகளை ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியருக்கு நுகா்வோா் புலனாய்வுக் கமிட்டியினா் பாராட்டு

நாமக்கல்: பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம் பிடித்ததையொட்டி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை, தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டியினா் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

ஆரோக்கிய வாழ்வுக்கு சிறுதானியமே சிறந்தது

நாமக்கல்: நோயற்று, ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறுதானிய உணவுகளே சிறந்தவை என சித்த மருத்துவா் கு.சிவராமன் தெரிவித்தாா். நாமக்கல்லில் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், ‘உடலினை உ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 420 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை கோரியும், கல்வி உதவித்தொகை, இல... மேலும் பார்க்க