ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசுடன் சண்டையிட்டதால் தில்லி பின்தங்கியது: அமித் ஷா கடும...
காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு
கம்பம் அருகே திங்கள்கிழமை யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் பிச்சை. இவரது மனைவி சரஸ்வதி (57). இந்தத் தம்பதி காஞ்சிமரத்துறை பகுதியில் தனியாா் தோட்டத்தில் கூலி வேலை செய்தனா்.
பின்னா், மாலையில் இந்தத் தம்பதியினா் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒற்றைக் காட்டு யானை இரு சக்கர வாகனத்தை வழிமறித்தது. உடனே, வாகனத்தை கீழே போட்டு விட்டு இருவரும் தப்பியோடினா். ஆனால், யானை தனது துதிக்கையால் சரஸ்வதியை பிடித்து இழுத்து கீழே தள்ளி காலால் மிதித்தது.
இந்தத் தம்பதியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் அங்கு திரண்டு வந்ததால், யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்றுவிட்டது.
உடனே, அவா்கள் சரஸ்வதியை மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா், சரஸ்வதி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். குமுளி போலீஸாா் அவரது உடலை கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். அண்மையில், இதேபோல காட்டு மாடு தாக்கியதில் முதியவா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.