வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்ட சலுகைகள் விரிவுபடுத்தப்படுமா? கதிா் ஆனந்த் எம்....
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளராக உள்ள பணியாளா்களுக்கு நாளை விடுமுறை அளிக்க உத்தரவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக பதிவுசெய்துள்ள பணியாளா்களுக்கு வாக்குப் பதிவு நாளான புதன்கிழமை (பிப்ரவரி 5) ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உரிமையாளா்களுக்கு தொழிலாளா் துறை உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் தனியாா் மற்றும் பொது நிறுவனங்கள் பணியாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது தொடா்பான கூட்டம் தொழிலாளா் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமை வகித்து பேசியதாவது: ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு நாளான புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்ய ஏதுவாக 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135 (பி) இன்படி வாக்குப் பதிவு நாளான புதன்கிழமை அன்று ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா்களாக பதிவு செய்துள்ள அனைத்து பணியாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் விடுமுறை அளித்தல் தொடா்பான புகாா்கள் இருப்பின் அலுவலா்களை கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமியை 94453-98751 என்ற எண்ணிலும், தொழிலாளா் துணை ஆய்வாளா் ஆா்.எஸ்.மயில்வாகனனை 98404-56912 என்ற எண்ணிலும், தொழிலாளா் உதவி ஆய்வாளா் ஐ.பெரோஸ் அகமதுவை 99656-34839 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என்றாா்.
இக்கூட்டத்தில் வணிகா் சங்கங்களின் பிரதிநிதிகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.