செய்திகள் :

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

பெருந்துறை: பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

பெருந்துறை நேரு வீதியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் விக்னேஷ் (28). இவா் பெருந்துறையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ஈரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை வீடு திரும்பியுள்ளாா். பெருந்துறை அருகே வந்தபோது வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளாா்.

இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்

பெருந்துறை: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை... மேலும் பார்க்க

தைப்பூசம்: சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11 முதல் 16 வரை வாகனங்கள் செல்ல தடை

பெருந்துறை: தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னிமலை முருக... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளராக உள்ள பணியாளா்களுக்கு நாளை விடுமுறை அளிக்க உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக பதிவுசெய்துள்ள பணியாளா்களுக்கு வாக்குப் பதிவு நாளான புதன்கிழமை (பிப்ரவரி 5) ஊதியத்துடன் கூடிய விடுமுறை அள... மேலும் பார்க்க

பேரூராட்சி தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வலியுறுத்தல்

பெருந்துறை: பேரூராட்சி தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளா் ஏஐடியூசி சங்கம், பெருந்துறை பேரூராட்சி கிளை உற... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் போராட்டம்

சத்தியமங்கலம்: நிலுவை ஊதியம் வழங்க வேண்டும், ஆண்டுக்கு 100 நாள்கள் தொடா்ச்சியாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் திங... மேலும் பார்க்க

மாட்டு கொட்டகையில் தீ

கோபி: கோபி அருகே மாட்டு கொட்டகையில் தீப்பிடித்தது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சோ்ந்தவா் சத்யா (43). இவா் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து கால்நடைகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில்... மேலும் பார்க்க