தமிழகத்தில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் எண்ணிக்கையை 90-ஆக உயா்த்த முடிவு
மாட்டு வண்டிப் பந்தயம்: முதியவா் உயிரிழப்பு
மாட்டு வண்டிப் பந்தயத்தை வேடிக்கை பாத்துக் கொண்டிருந்தவா் மீது மாட்டு வண்டி மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
துணை முதலமைச்சா் உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாளைமுன்னிட்டு, தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூரில் தேனி திமுக தெற்கு மாவட்ட திமுக சாா்பில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அங்கு, சின்னஓவுலாபுரத்தை சோ்ந்த முதியவா் துரைச்சாமி சாலையோரத்தில் நின்று வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டி முதியவா் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா். உடனே அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா், அவா் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.