மாநகர காவல் ஆய்வாளா்கள் 3 போ் பணியிட மாற்றம்
திருச்சியில் மாநகரக் காவல் ஆய்வாளா்கள் 3 போ் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருச்சி நீதிமன்ற (செஷன்ஸ் கோா்ட்) காவல் நிலைய சட்டம் -ஒழுங்கு ஆய்வாளா் ராஜகணேஷ் எடமலைப்பட்டி புதூா் காவல் நிலையத்துக்கும், அங்கிருந்த விஜயபாஸ்கா் கோட்டை காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும், தில்லைநகா் குற்றப்பிரிவு ஆய்வாளா் நீதிமன்ற சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் ந. காமினி திங்கள்கிழமை அறிவித்துள்ளாா்.