டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு இடம்!
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. மலேசியாவில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வென்றது.
இதையும் படிக்க: சஞ்சு சாம்சனுக்கு காயம்; மீண்டும் அணியில் இடம்பெறுவாரா?
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி
மலேசியாவில் நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி அறிவித்துள்ள இந்த அணியில் 4 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த டி20 தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகி விருதினை வென்ற கொங்கடி த்ரிஷா உள்பட 4 வீராங்கனைகள் சிறந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். கொங்கடி த்ரிஷாவை தவிர்த்து, கமலினி, வைஷ்ணவி சர்மா மற்றும் ஆயுஷி சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம்: கௌதம் கம்பீர்
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி விவரம்
கொங்கடி த்ரிஷா, ஜெம்மா போத்தா, டேவினா பெர்ரின், கமலினி, கயோம் பிரே, பூஜா மஹாட்டோ, காய்லா ரேனெக், கேட்டி ஜோன்ஸ், ஆயுஷி சுக்லா, சமோடி பிரபோதா, வைஷ்ணவி சர்மா மற்றும் தபிஷெங் நினி.