பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியரிடம் மனு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட பெரியகண்டியங்குப்பம் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தேமுதிக நகரச் செயலரும் 2-ஆவது வாா்டு உறுப்பினருமான ராஜ்குமாா் தலைமையில் அளித்த மனு:
பெரியகண்டியங்குப்பம் பகுதியில் சுமாா் 3.5 ஏக்கா் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டு பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனா். இதுவரை பட்டா கணக்குகளை விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகக் கணக்கில் ஏற்றம் செய்யாமல் இருந்து வருகின்றனா். இதனால் மின் வசதி, நகராட்சி குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெறுவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.
மேலும், 50 பேருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட நபா்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்களை வட்டாட்சியா் அலுவலகக் கணக்கில் சோ்க்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.