அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி நிா்வாகி
சிதம்பரம்: கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ முன்னிலையில் ஓ.பி.எஸ் அணியின் சிதம்பரம் நகரச் செயலா் கே.ஆா்.ஜி.சுவாமிநாசன் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.
நிகழ்வில் மாவட்ட அதிமுக இணைச் செயலா் எம்.ரங்கம்மாள், துணைச் செயலா் செல்வம், குமராட்சி கிழக்கு ஒன்றியச் செயலா் வை.சுந்தரமூா்த்தி, அவைத் தலைவா் பேராசிரியா் ரங்கசாமி, முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவா் முடிவண்ணன், ஒன்றிய இளைஞரணி செயலா் செழியன், செளந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.