Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
அண்ணா நினைவு நாள்: திமுக, அதிமுகவினா் மரியாதை
நெய்வேலி: முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி, கடலூா், பண்ருட்டி பகுதிகளில் திமுக, அதிமுகவினா் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில், கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கோ.அய்யப்பன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, மேயா் சுந்தரி, மாநகர திமுக செயலா் ராஜா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் ஆதரவாளா்கள் அவைத் தலைவா் சேவல் குமாா் தலைமையிலும், எம்ஜிஆா் மன்ற இளைஞரணி இணைச் செயலா் சி.கே.காா்த்திகேயன் தலைமையில் இரு அணிகளாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பண்ருட்டி நகர திமுக சாா்பில் நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கடலூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் நந்தகோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, காந்தி பூங்காவில் இருந்து ஊா்வலமாக சென்று மாலை அணிவித்தனா்.