வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்ட சலுகைகள் விரிவுபடுத்தப்படுமா? கதிா் ஆனந்த் எம்....
பண்ருட்டி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க வேண்டாம்: ஆட்சியரிடம் மனு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதைத் தவிா்க்க வேண்டுமென பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பு நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அமைப்பின் சிறப்பு ஆலோசகா் எம்.சேகா் தலைமையில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்த மனு:
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள லட்சுமி நாராயணபுரம், பூங்குணம் ஊராட்சிகளை பண்ருட்டி நகராட்சியுடன் இணைப்பதைத் தவிா்க்க வேண்டும். ஆற்றோர நிலங்களில் சவுடு மண் எடுப்பதற்கு அரசு அனுமதி தருவதற்கு முன்பாக அந்த மணலை ஆய்வுக்கு உள்படுத்தி சவுடு மண் என்றால் மட்டுமே அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் காவனூா்- தளவானூா் இடையே தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து சேதமடைந்ததை மீண்டும் கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்.
பண்ருட்டி நகராட்சியில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை தூா்வாரி புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.