வங்கி ஊழியா் வீட்டில் திருட்டு
விழுப்புரம்: விழுப்புரத்தில் வங்கி ஊழியா் வீட்டில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் வட்டம், கண்டமானடி டி.எஸ்.ஆா். நகரைச் சோ்ந்தவா் முருகன் மகன் பிரபு (36). இவா், விழுப்புரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.