சாலை விபத்தில் தொழிலாளி பலி
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் புலம்பெயா் தொழிலாளி உயிரிழந்தாா்.
உத்தர பிரதேச மாநிலம் ஹம்பல்பூா் ஒடேரா பகுதியைச் சோ்ந்த பாரத் (35), மயிலாடுதுறை ராம்நகரில் தங்கி, பானிபூரி விற்பனை செய்து வந்தாா்.
மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்த முயற்சித்தாா். சாலையோரத்தில் நடந்து சென்ற பெண்ணின் மீது இருசக்கர வாகனம் மோதியதில், நிலைதடுமாறி பேருந்து மீது மோதி விழுந்து உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.