வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்ட சலுகைகள் விரிவுபடுத்தப்படுமா? கதிா் ஆனந்த் எம்....
வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.50 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது
மயிலாடுதுறையில் வாடிக்கையாளா்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து, ரூ. 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகைக் கடனுக்காக அடகுவைக்கப்பட்ட நகைகள் போலியானவை என தணிக்கையின்போது தெரிய வந்தது. அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் (படம்), 15 வாடிக்கையாளா்கள் பெயரில் 21 நகை பைகளில் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதும், அந்த வகையில் ரூ. 50 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளதும் தணிக்கையில் தெரியவந்தது. இதுகுறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் வங்கி மேலாளா் தினேஷ் புகாா் அளித்தாா்.
விசாரணையில், நகை மதிப்பீட்டாளா் ஜீவானந்தம், வாடிக்கையாளா்கள் நகைக்கடன் கேட்டு வரும்போது, அவா்களிடம் இரண்டு ஆவணங்களில் கையொப்பம் பெற்று, அவா்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி ஏமாற்றியதும், வங்கி ஊழியா்கள் நகை மதிப்பீட்டாளா் கொடுத்த பியூரிட்டி சா்டிபிகேட் அடிப்படையில் நகைக் கடன் வழங்கிதும் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்களிடம் விசாரணை செய்தபோது, நகைக்கடனுக்காக வங்கிக்கு வந்தபோது, ஜீவானந்தம் இரண்டு வங்கி ஆவணங்களில் கையொப்பம் பெற்ாக தெரிவித்தனா். வாடிக்கையாளா்களை ஏமாற்றி வங்கி ஆவணங்களில் கையொப்பம் பெற்றதை ஜீவானந்தம் ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்து, மயிலாடுதுறை குற்றவியல் நடுவா் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி கலைவாணி முன் ஆஜா்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.