செய்திகள் :

2025 கிராமி விருதுகள்: இந்திய வம்சவளிப் பெண் வெற்றி!

post image

2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் இந்திய வம்சவளியைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருதின் 67வது விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று (பிப்.2) நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி சந்திரிகா டன் டன் (வயது 71) சிறந்த தற்கால ஆல்பம் (BEST NEW AGE ALBUM) எனும் பிரிவில் அவரது ’த்ரிவேணி’ இசை ஆல்பத்திற்காக கிராமி விருதை வென்றுள்ளார்.

இதையும் படிக்க: ’எஸ்டிஆர் - 50’ தயாரிப்பாளராக களமிறங்கும் நடிகர் சிம்பு!

தென் ஆப்பிரிக்க புல்லாங்குழல் இசைக்கலைஞரான வௌட்டர் கெல்லர்மேன் மற்றும் ஜப்பானிய செல்லிஸ்ட் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து அவர் உருவாக்கிய இந்த ‘த்ரிவேணி’ இசை ஆல்பம் பல்வேறு முன்னனி இசைக்கலைஞர்களுடன் இந்தப் பிரிவில் போட்டியிட்டு வென்றுள்ளது.

முன்னதாக, சென்னையில் வளர்ந்த சந்திரிகா மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், அமெரிக்காவில் குடியேறி அங்கு தொழிலதிபராக உயர்ந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதன் முதலாக அவர் வெளியிட்ட ’சோல் கால்’ இசை ஆல்பம் அந்தாண்டின் கிராமி விருதுகளில் இதேப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்க... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி! குடும்பத்தினர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார். குல்கம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் இன்று (பிப்.1) மதியம் ஓய்வுப் பெற்ற முன்னாள் ராணு... மேலும் பார்க்க

கார் வெடி குண்டு தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி!

சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று (பிப்.3) விவசாய தொழி... மேலும் பார்க்க

நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது! விடியோ வைரல்!

ஜம்மு காஷ்மீரில் நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.ஜம்முவின் டோமானா காவல் நிலையக் கட்டுப்பாட்டிலுள்ள லாலே டா பாக் பகுதியிலுள்ள 21.5 மர்லா அளவிலான நிலம் ... மேலும் பார்க்க

பாம்பன் பால திறப்பு விழா: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதி... மேலும் பார்க்க

பிப். 10-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்.10 ஆம் தேதி 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக பட்ஜ... மேலும் பார்க்க