செய்திகள் :

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்

post image

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி இன்று(பிப். 3) நடைபெற்றது. பேரணிக்குப் பின் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே அவை நடவடிக்கை!

அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:

“எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”

தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!

நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது! விடியோ வைரல்!

ஜம்மு காஷ்மீரில் நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.ஜம்முவின் டோமானா காவல் நிலையக் கட்டுப்பாட்டிலுள்ள லாலே டா பாக் பகுதியிலுள்ள 21.5 மர்லா அளவிலான நிலம் ... மேலும் பார்க்க

பாம்பன் பால திறப்பு விழா: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதி... மேலும் பார்க்க

பிப். 10-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்.10 ஆம் தேதி 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக பட்ஜ... மேலும் பார்க்க

2025 கிராமி விருதுகள்: இந்திய வம்சவளிப் பெண் வெற்றி!

2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் இந்திய வம்சவளியைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருதின் 67வது விருது வழங்கும் நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கும்பமேளா விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு!

மகா கும்பமேளா விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளி நடப்பு செய்தனர்.மகா கும்பமேளா நெரிசலில் பலி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி: பிப். 8ல் திமுக கண்டன பொதுக்கூட்டம்!

நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மத்திய பாஜக அரசுக்கு எதிராக பிப். 8ல் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க