செய்திகள் :

Chinese New Year: 7 நாள் விடுமுறையுடன் கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டு... அப்படி என்ன சிறப்பு?

post image

சீனாவில் முக்கியமாக கொடடப்படும் திருவிழா சீனப் புத்தாண்டு (Chinese New Year). இது சந்திர-சூரியன் அடிப்படையில் அமைந்த சீன நாள்காட்டி (காலண்டர்) துவக்கத்தில் கொண்டாடப்படுகிறது.

இது வசந்தப் பண்டிகை அல்லது "Chun Jie" என அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது வசந்த காலத்தின் முதல் நாள் ஆகும். சீன புத்தாண்டு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.

சீனப் புத்தாண்டு

சீன வானியல் அறிஞர்கள் லுனி-சோலார் காலண்டரை (சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கங்களை) மற்றும் Tian Gan Di Zhi எனப்படும் 24 சூரிய காலங்களைப் பயன்படுத்தி, புத்தாண்டு எந்த நாளில் இருக்கும் என்பதையும் கண்டு பிடித்தனர்.

மேலும், இந்த 24 காலங்கள் இயற்கையில் நிகழும் பருவ மாற்றங்களை காட்டுகிறது. உதாரணமாக எப்போது மழை வரும், எப்போது பனிப்பொழிவு இருக்கும் என்பதனை கணிக்க உதவுகின்றது.

இன்றைக்கும், நாஞ்சிங்கில் உள்ள Zijinshan Observatory இந்த கருவிகளை பயன்படுத்தி சீன புத்தாண்டு எந்த நாளில் வரும் என்பதை கணிக்கிடுகிறார்கள்.

1912 ஆண்டு, புதிதா உருவாக்கப்பட்ட சீன குடியரசு கிரிகோரியன் காலண்டரை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கிட்டப்போது அதோட தலைவர்கள் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு "வசந்த விழா"ன்னு பேர் வைத்தார்களாம். இன்றும் சீனாவில் இதே பெயரில் தான் அழைக்கப்படுது.

லூநார் நியூ இயர் (சந்திர புத்தாண்டு) பேருக்கு பொருத்தமா, அதோட தேதி நிலவின் நிலமையை பொருத்து முடிவாகும், அதனால் ஒவ்வொரு ஆண்டும் அது மாறி மாறி வரும்.

சீனப் புத்தாண்டு

சந்திர காலண்டரில், ஒவ்வொரு ஆண்டும் சீன ஜாதகத்திலிருந்து ஒரு விலங்கோட பெயர் இடம் பெற்றிருக்கும். இது பண்டைய சீன கதைகளிருந்து வந்திருக்கு. இந்த 12 விலங்குகள்- எலி, மாடு, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி ஆகும். ஓராண்டு சுழற்சி முறையில் வேறு வேறு விலங்குகள் மீண்டும் மீண்டும் வரும் என்கிறார்கள்.

சந்திர புத்தாண்டு தென் கொரியா, திபெத், வியட்நாம், சிங்கப்பூர், இந்தோனேஷியா, மலேசியா மாதிரி சீனர்கள் நிறைய இருக்கும் இடங்களில் கொண்டாடப் படுகிறது.

நாடு வேறானாலும், இந்தப் பண்டிகையின் முக்கியமான விஷயம் குடும்பமா சேர்ந்து சந்தோஷப்படுறத்துக்கும். நல்ல எதிர்காலத்துக்கு நம்பிக்கை வைப்பதும்தான்.

சீன மக்களின் வசந்த விழாவானது 40 நாள்கள் நடக்கின்றது மற்றும் பல துணை விழாக்கள் மற்றும் வழக்கங்களும் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு தனியாக 7 நாள்கள் கொண்டாட்டம் இருக்கும். எனவே அந்த 7 நாள்களும் அரசாங்கம் விடுமுறை அளிக்கிறது.

புத்தாண்டின் மாலை நேரத்தில் சீன குடும்பங்கள் பாரம்பரியமாக ஒரு பெரிய கூட்டு உணவை சமைத்து சாப்பிடுவார்கள். இது ஆண்டின் மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இந்த சிறப்பு உணவு பெரும்பாலும் குடும்பத்தின் முதியவர் வீட்டில் நடத்தப்படுகிறது.

சீனப் புத்தாண்டு

சந்திர புத்தாண்டு தனக்கென ஒரு தனி பயணக்காலத்தை உருவாக்கி உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல கோடிக்கணக்கான மக்கள் சீனாவில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு குடும்பத்தாருடன் வருவார்கள். அனைவரும் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். பயணிகள் கூட்ட நெரிசலால் இந்த விழாவானது (world largest human migration) உலகின் மிக பெரிய மனித இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது. ரயில்கள் மற்றும் விமான நிலையங்களிலும் கூட பெரிதும் நெரிசலை ஏற்படுத்துகிறது, இது அந்தப் பண்டிகையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்றே கூறலாம்.

500 மீட்டரில் 200 கடைகள்... எப்போதும் பரபரப்பாக இயங்கும் திருவாரூர் பழைய தஞ்சை சாலை.. ஒரு விசிட்!

திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து கொஞ்சம் தூரம் நடந்தால் பழைய தஞ்சை சாலை. இந்த சாலையில் என்ன ஸ்பெஷல்?பைக், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களின் ரிப்பேர், உதிரி பாகங்கள்ஆகியவற்றுக்குப் பிரபலமான இடம்தான் செ... மேலும் பார்க்க

டெல்லி குடியரசு தின விழாவில் கரகாட்டம்; 100 கலைஞர்கள், 25 நாள் பயிற்சி... நெகிழும் தமிழக கலைஞர்கள்!

இந்தியாவின் 76 வது குடியரசு தின விழாவிற்கான முன்னேற்பாடுகள் எல்லா மாநிலங்களிலும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியா... மேலும் பார்க்க

Ed Bazaar: சென்னையில் உணவு மற்றும் கைவினை பொருட்கள் திருவிழா; குவியும் பொதுமக்கள் | Photo Album

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத... மேலும் பார்க்க

மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்வு..!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடு முட்டியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நவீன்குமார் இந்த போட்டிகளின்போது மாடுபிடி வீரர்கள், க... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்... குடும்பத்துடன் குவிந்த மக்கள்..! | Photo Album

தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் கொண்டாட்டம் தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் கொண்டாட்டம்தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் கொண்டாட்டம்தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் கொண்டாட்டம்தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் கொண்டாட்டம் மேலும் பார்க்க

"11 லட்சம் கொடுத்து அந்த ஜல்லிக்கட்டு மாட்ட வாங்கினேன்..." - கைக்குறிச்சி தமிழ்ச்செல்வன் பேட்டி

ஜல்லிக்கட்டுக் களத்தில் கைக்குறிச்சி தமிழ்செல்வனின் மாடுகள் என்றால் பிரபலம். அவரைச் சந்தித்து அவருடைய அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்தோம்.ஜல்லிக்கட்டைப் பொருத்தவரை கைக்குறிச்சி தமிழ்செல்வன் என்கிற பெய... மேலும் பார்க்க