காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை, ஒருவருக்கு சிறை!
காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 10 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த ஜன.8ஆம் தேதி கைது செய்தது. இவர்களில் 9 பேரை இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
9 மீனவர்களில் இரு சிறுவர்களை எச்சரித்தும் 7 பேரை நிபந்தனைகளுடனும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்
அதேசமயம் படகு ஓட்டுநருக்கு மட்டும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் ரூ. 40 லட்சம்அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.