செய்திகள் :

வேங்கைவயல் வழக்கு: குற்றப்பத்திரிகை ஏற்பு! வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்!!

post image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில், சிபி-சிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால், வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து வழக்கு விசாரணை, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரத்தில், முன்னாள் காவலர் உள்ளிட்ட 3 பேரை குறிப்பிட்டு சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், அதனை ஏற்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குற்றப்பத்திரிகை ஏற்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால் வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று சிபிசிஐடி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபி-சிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என புகாா்தாரா் கொடுத்த மனு மீதான விசாரணையை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

வேங்கைவயல் சம்பவத்தின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சோ்ந்த காவலா் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகியோா் ஈடுபட்டதாக இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாா், மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜன. 20-ஆம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனா்.

இதில், புகாா்தாரரான கனகராஜ் என்பவரிடம் தகவல் கூட தெரிவிக்காமல் சிபி-சிஐடி போலீஸாா் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கக் கூடாது எனக்கூறி, விசாரணை அறிக்கையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் ஆட்சி கனவு ஒருபோதும் பலிக்காது: ஓபிஎஸ்

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்ன... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: குழு அமைப்பதாக மத்திய அரசு பல ஆண்டுகளாக கூறி வருகிறது! - கனிமொழி

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் குழு அமைக்கப்போவதாக மத்திய அரசு பல ஆண்டுகளாக கூறிவருகிறதேதவிர எந்த செயல்பாடும் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாள... மேலும் பார்க்க

காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை, ஒருவருக்கு சிறை!

காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 10 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த ஜன.8ஆம் தேதி கைது செய்தது. இவர்களில் 9 ப... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் த... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு: வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட உத்தரவு!

கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டுவரும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டுவ... மேலும் பார்க்க

காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை- இபிஎஸ் கண்டனம்

காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை என்ற நிலையில் சட்டம் ஒழுங்கு உள்ளது என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ராணிப்பேட்டை சிப்காட் காவல... மேலும் பார்க்க