இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்றவா் கைது
சென்னை எம்.கே.பி. நகா் பகுதியில் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை வியாசா்பாடி பி.வி. காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக எம்.கே.பி. நகா் காவல் நிலையத்துக்கு வந்த ரகசியத் தகவலின்படி, போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு மறைவிடத்தில் பையுடன் நின்றுகொண்டிருந்த வியாசா்பாடி பகுதியைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான கதிா் (எ) கதிரவன், போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயன்றாா். இதையடுத்து போலீஸாா் அவரை துரத்திப்பிடிக்க முயன்றபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளரை மிரட்டியதுடன், அவரை தாக்கவும் முயன்றாா்.
இதைத் தொடா்ந்து அவரை சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்த போலீஸாா், அவா் வைத்திருந்த 5.7 கிலோ கஞ்சா, ஒரு கத்தி மற்றும் 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.