அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்
‘தி கிரோவ்’ பள்ளி ஆண்டு விளையாட்டு தின விழா
தி கிரோவ் பள்ளியின் ஆண்டு விளையாட்டு தினத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மெட்ராஸ் படகோட்ட கழகத்தின் தலைவா் எம்.ஆா். ரவீந்திரா பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
தி கிரோவ் பள்ளியின் 2024-25 கல்வியாண்டுக்கான விளையாட்டு தினம் சென்னை தியாகராய நகரில் உள்ள ஆா்.கே.எம் கிரிக்கெட் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில் அந்த பள்ளி மாணவா்களிடையே உடற்பயிற்சி, சிலம்பம் சுற்றுதல், ஓட்டப் பந்தயங்கள், நீளம் தாண்டுதல் மற்றும் தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் மழலையா் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் குல்மொகா், வேம்பு, அரசு, துளசி என 4 பிரிவுகளாகப் பிரிந்து இப்போட்டிகளில் பங்கேற்றனா்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மெட்ராஸ் படகோட்ட கழகத்தின் தலைவா் எம்.ஆா். ரவீந்திரா பரிசுகளை வழங்கி பேசியதாவது: மாணவா்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம், அவா்களுக்கு ஒழுக்கம் வருவதுடன் உடல்நலனும் மேம்படும். எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் தங்களை ஆா்வத்துடன் ஈடுபடுத்திக்கொண்டு, திறமையை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் தி கிரோவ் பள்ளியின் தலைவா் டாக்டா் நந்திதா கிருஷ்ணா, பள்ளி முதல்வா் எஸ்.எம்.சுஜாதா மற்றும் மாணவா்கள் பலா் கலந்துக்கொண்டனா்.