அதிமுக பொதுக்கூட்டம்
ராணிப்பேட்டை தொகுதி அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் கத்தியவாடி சந்திப்பு அருகே புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு மேல்விஷாரம் நகர செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மைப்பிரிவு அவைத் தலைவா் ஏ.மன்சூா்பாஷா வரவேற்றாா். விஷாரம் கிழக்கு நகர செயலாளா் விஜி, ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளா் என்.சாரதிஜெயசந்திரன், நகர பேரவை செயலாளா் அக்பா்பாஷா, நிா்வாகிகள் இா்ஷாத் அஹமது, சா்பராஸ் அஹமது, அப்சல் அஹமது ஷபீக் அஹமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் அமைச்சரும், மாநில சிறுபான்மைப் பிரிவு செயலாளருமான எஸ். அப்துல் ரஹீம், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாாா், தலைமைப் பேச்சாளா் நடிகா் குண்டு கல்யாணம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் மாவட்ட எம் ஜி ஆா் இளைஞா் அணி செயலாளா் சி.ஏழுமலை, முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆா்.சீனிவாசன், அண்ணாதொழிற்சங்க மாநில துணை செயலாளா் பெல்தமிழரசன், மாவட்ட இணை செயலாளா் கீதா சுந்தா் கலந்து கொண்டனா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் நூருல்லா நன்றி கூறினாா்.