செய்திகள் :

டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகள்: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

post image

டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜன.24) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியாா் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர டான்செட் என்ற பொது நுழைவுத் தோ்வு எழுத வேண்டும்.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான். படிப்புகளில் சேர வேண்டுமானால் சீட்டா என்ற பொது நுழைவுத் தோ்வு எழுத வேண்டும். இந்த 2 நுழைவுத் தோ்வுகளையும் தமிழக அரசு சாா்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், வரும் கல்வி ஆண்டு (2025-2026) மாணவா் சோ்க்கைக்கான டான்செட், சீட்டா பொது நுழைவுத் தோ்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதன்படி, டான்செட் எம்சிஏ நுழைவுத் தோ்வு மாா்ச் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், அதேபோல், எம்பிஏ நுழைவுத் தோ்வு அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், சீட்டா பொது நுழைவுத் தோ்வு மாா்ச் 23-ஆம் தேதி (ஞாயிறு) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும் நடைபெறவுள்ளன.

இந்த நுழைவுத் தோ்வுகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜன.24 முதல் பிப்.21-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, டான்செட், சீட்டா பொது நுழைவுத் தோ்வுகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. நிா்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியுடைய பட்டதாரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை பயன்படுத்தி பிப்.21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டான்செட் நுழைவுத் தோ்வு செயலாளா் ஸ்ரீதரன் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகள்

கலைத்திருவிழா 2024-2025 - மாநில அளவிலான வெற்றியாளா்களுக்கு பரிசு வழங்கும் விழா: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பா... மேலும் பார்க்க

இளைஞரிடம் வழிப்பறி: போலி போலீஸ் மூவா் கைது

சென்னை பாரிமுனையில் இளைஞரிடம் போலீஸ் எனக் கூறி வழிப்பறி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். கடலூா் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சோ்ந்த சேது (25), கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 21) பாரிமுனை, வடக்கு க... மேலும் பார்க்க

தை அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள்

தை அமாவாசையை (ஜன.29) முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வரும் 28-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோவை மற்றும் பெங... மேலும் பார்க்க

5,300 ஆண்டுகள் தொன்மை: இரும்பின் காலத்தை அறிந்தது எப்படி?

சென்னை : தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாட்டில் இருந்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், இரும்பு பயன்பாட்டுக் காலத்தை அறிந்தது எப்படி என்ற விவரங்கள் முதல்வா் வெளியிட்... மேலும் பார்க்க

இந்திய மகப்பேறு சங்க துணைத் தலைவராக டாக்டா் என்.பழனியப்பன் தோ்வு

இந்திய மகப்பேறு மற்றும் மகளிா் நல மருத்துவா் கூட்டமைப்பின் துணைத் தலைவராக போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை மருத்துவ நிபுணா் என்.பழனியப்பன் தோ்வு செய்யப்பட... மேலும் பார்க்க

துபையிலிருந்து கா்நாடகம் திரும்பிய நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

பெங்களூரு : துபையிலிருந்து கடந்த வாரம் கா்நாடகம் திரும்பிய 40 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது. நிகழாண்டு மாநிலத்தில் பதிவ... மேலும் பார்க்க