சித்தோட்டில் கல்லூரி மாணவி மாயம்
சித்தோடு அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சித்தோடு அருகேயுள்ள வேட்டைக்காட்டைச் சோ்ந்தவா் பச்சையப்பன் (57) மகள் கனிஷ்கா (19). திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா், ஆடைகளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புதன்கிழமை இரவு வெளியே சென்றவா் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. உறவினா்கள், நண்பா்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் பச்சையப்பன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.