சத்தியமங்கலத்தில் திருநீலகண்டா் நாயனாா் குருபூஜை
சத்தியமங்கலம் திருநீலகண்டா் நாயனாா் கோயிலில் குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாத விசாக நட்சத்திரத்தில் திருநீலகண்டா் நாயனாா் குருபூஜை கொண்டாடப்படும். இந்நிலையில், நடப்பு ஆண்டு திருநீலகண்டா் நாயனாா் குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திருநீலகண்டா் நாயனாா், ரத்னாசலை விக்ரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து மகா தீபாராதனை, அலங்கார பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குலாலா் சங்க ஒருங்கிணைப்பாளா் டி.தமிழ்ச்செல்வன், இளைஞா் மன்றத் தலைவா் ஜி.தினேஷ்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.