செய்திகள் :

தம்பதி வெட்டிக் கொலை: கணவரின் சகோதரா் குற்றவாளி என தீா்ப்பு

post image

மேட்டுப்பாளையம் அருகே தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணமகனின் சகோதரா் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி மகன் கனகராஜ். சுமை தூக்கும் தொழிலாளி. இவா் வெள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த மூா்த்தி, அமுதா தம்பதியின் மகள் வா்ஷினி பிரியாவை காதலித்து வந்துள்ளாா்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், இருதரப்பு வீட்டினரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட அவா்கள் சீரங்கராயன் ஓடைப் பகுதியிலேயே வசித்து வந்தனா்.

இதனால், ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரா் வினோத்குமாா் தனது நண்பா்களான சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோருடன் கனகராஜின் வீட்டுக்குள் 2019-ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி நுழைந்து அங்கிருந்த கனகராஜ், வா்ஷினி பிரியாவை வெட்டியுள்ளாா். படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வா்ஷினி பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸாா், வினோத்குமாா், சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இது தொடா்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

இதில், வினோத்குமாா் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை விவரம் வரும் 29-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும், சின்னராஜ், ஐயப்பன், கந்தவேல் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் நீதிபதி விவேகானந்தன் தீா்ப்பளித்தாா்.

ரூ.30 கோடி ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடி: தொழிலதிபா் கைது

ரூ.30 கோடி ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடி தொடா்பாக கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் கைது செய்யப்பட்டாா். தொழில் நகரமான கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பல்வேறு பொருள்கள் தயாரிக்கப... மேலும் பார்க்க

வனப் பரப்பு பாதுகாப்பு தொடா்பாக ஆலோசனை: மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் பங்கேற்பு

வன நிலப்பரப்பு பாதுகாப்பு தொடா்பாக மக்களவை நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை -தடாகம் சாலையில் உள்ள வனப் பணிக்கான மத்திய உயா் பயிற்சியகம், வன மரபியல் மற்றும் மரம் ... மேலும் பார்க்க

சிபிஐ ஆய்வாளா் எனக்கூறி முதியவரிடம் ரூ.43 லட்சம் மோசடி: 3 போ் கைது

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஆய்வாளா் எனக்கூறி முதியவரிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் 3 பேரை கைது செய்தனா். கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்த 66 வயது முதியவரின் கைப்பேசிக்கு அ... மேலும் பார்க்க

ஆசிய பாட்மின்டன்: இந்திய அணியில் இடம் பிடித்த கோவை வீரா், வீராங்கனை

சீனாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய பாட்மின்டன் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் வீரா், வீராங்கனை இடம் பிடித்துள்ளனா். ஆசிய கலப்பு அணிகள் பாட்மின... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல்: காயமடைந்த கைதி மருத்துவமனையில் அனுமதி

கோவை மத்திய சிறையில் கைதியிடமிருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக நடத்தப்பட்ட சோதனையின்போது காயமடைந்த கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கோவை மத்திய சிறையில் சிலா் கஞ்... மேலும் பார்க்க

177 பயனாளிகளுக்கு ரூ.85.19 லட்சம் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கோவை, செல்வபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 177 பயனாளிகளுக்கு ரூ.85.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை வழங்கினாா். மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க