அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல...
ஆசிய பாட்மின்டன்: இந்திய அணியில் இடம் பிடித்த கோவை வீரா், வீராங்கனை
சீனாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய பாட்மின்டன் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் வீரா், வீராங்கனை இடம் பிடித்துள்ளனா்.
ஆசிய கலப்பு அணிகள் பாட்மின்டன் போட்டி சீனாவின் குயிங்தவோ நகரில் பிப்ரவரி 11- ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள லக்ஷயா சென் தலைமையிலான ஆடவா் அணி, பி.வி.சிந்து தலைமையிலான மகளிா் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் இருவா் இடம்பெற்றுள்ளனா். ஆடவா் பிரிவில் கே.சதீஷ்குமாா், மகளிா் பிரிவில் ஆத்யா வாரியாத் ஆகியோா் இந்திய அணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இருவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஆசிய பாட்மின்டன் போட்டிக்கான இந்திய அணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள இருவரையும் எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா், கல்லூரியின் முதல்வரும், செயலருமான பி.எல்.சிவகுமாா் ஆகியோா் பாராட்டினா்.