மலர் தொடர் கடைசி நாள் படப்பிடிப்பு: கேக் வெட்டிக் கொண்டாட்டம்!
பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை - ஷொரணூா் ரயில் பகுதியாக ரத்து
கேரள மாநிலம், ஒட்டப்பாலம் அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - ஷொரணூா் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கேரள மாநிலம், ஒட்டப்பாலம் அருகே ரயில்
பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜனவரி 26-ஆம் தேதி மாலை 4.25 மணிக்குப் புறப்படும் கோவை - ஷொரணூா் ரயில் (எண்: 56603) பாலக்காடு - ஷொரணூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயிலானது அன்றைய தினம் கோவை - பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.