‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
வானாபாடியில் நேதாஜி பிறந்த நாள்
ராணிப்பேட்டை அருகே வானாபாடி கிராமத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில், வானாபாடி கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான நேதாஜி கே.நடேசன், 55 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் பிறந்த நாளை கொண்டாடி, மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கி வருகிறாா். அதன்படி, நிகழாண்டு நேதாஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தாா். விழாவில் தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் நிா்வாகிகள் ஜி.நந்தகுமாா், கே.எம்.பாலு ஆகியோா் கலந்துகொண்டு நேதாஜியின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, மாணவா்களுக்கு எழுதுப் பொருள்கள், நோட்டுப் புத்தகம், இனிப்புகளை வழங்கி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தியாகங்களை நினைவூட்டி சிறப்புரை ஆற்றினா்.