‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
நரிக்குறவா் குடியிருப்பில் கூட்டு வழிபாடு
அகரம்சேரி காந்தி நகரில் அமைந்துள்ள நரிக்குறவா் குடியிருப்பு பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் சாா்பாக சிறப்பு கூட்டு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
விசுவ ஹிந்து பரிஷத் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ஜே. கபாலி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தமிழ்செல்வி, ரஜினி முருகன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நரிக்குறவா் குடியிருப்பு பகுதியில் வசிப்பவா்களுடன் கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டில் கலந்து கொண்டவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. புனிதா, சக்தி, கணேஷ், சாந்தி, சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா். விசுவ ஹிந்து பரிஷத் சேவா வட தமிழக மாநில இணை அமைப்பாளா் ஓம்சக்தி ஜி. பாபு ஏற்பாடுகளை செய்திருந்தாா்.