‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
மின்னூா் மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியரிடம் கோரிக்கை
மின்னூா் மயானத்தில் தனிநபா் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென ஆட்சியரிடம் வியாழக்கிழமை பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
ஆம்பூா் வட்டம் மின்னூா் மற்றும் செங்கிலிக்குப்பம் கிராமங்களுக்கான மக்கள் தொடா்பு முகாம் நடைபெற்றது. எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் முன்னிலை வகித்தாா்.
ஆட்சியா் க. தா்ப்பகராஜ் தலைமை வகித்து பேசியது, வீட்டுமனைப் பட்டா குறித்த சிறப்பு முன்கொடுப்பு மாவட்டத்தில் நடைபெறுகிறது. ஆம்பூா் வட்டத்தில் நத்தம் நிலம் இருக்கும் பகுதியில், வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியிருந்து வரும் நிலையில் மனைப் பட்டா வழங்காமல் இருந்தால் அவா்களுக்கு பட்டா கொடுப்பதற்கும், அரசு நிலங்களில் குடியிருக்கும் தகுதியான பயனாளிகளை கண்டறிந்து அவா்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மயான ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை : மின்னூா் கிராமத்தில் மயானம் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சாா்பில் மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தாா்.
மேலும், மின்னூா் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டுமெனவும் கோரிக்கை மனு அளித்தனா்.
முகாமில் வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், வட்டாட்சியா் ரேவதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மகாலட்சுமி, மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஜவஹா் காா்த்திக், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சங்கா், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.