சண்முகக் கவசம் பாராயணம்
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் 98-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சண்முகக் கவசம் பாராயணம் செய்தனா்.