‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்
திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் பொதுவிநியோகத் திட்டகுறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜன.25) நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜனவரி மாதத்துக்கான வட்ட அளவிலான பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
திருப்பத்தூா் வட்டம், மண்டலநாயனகுண்டா ரேஷன் கடையிலும், நாட்டறம்பள்ளி வட்டம், பச்சூா் ரேஷன் கடையிலும், வாணியம்பாடி வட்டம், பத்தாப்பேட்டை ரேஷன் கடையிலும், ஆம்பூா் வட்டம், பெரியாங்குப்பம் ரேஷன் கடையிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.
முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம், தொலைப்பேசி எண் பதிவு, மாற்றம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோருதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருள்களின் தரம் குறித்த புகாா்கள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.