குடியரசு தின விழா: போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகை
குடியரசு தின விழாவையொட்டி, நாமக்கல்லில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் காவல் துறையினரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஒத்திகையில் மாணவா்கள், காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். வியாழக்கிழமை காலை 6 மணியளவில், மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் துணை கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் கலந்து கொண்டனா்.