வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நாமக்கல்லில் வருவாய் கிராம ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.பரமசிவம் தலைமை வகித்தாா். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். கிராம உதவியாளா்கள் ஓய்வு பெறும் போது கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், பிப். 5-ஆம் தேதி அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் காத்திருப்பு போராட்டம், 27-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.