வெடி வைத்து மீன் பிடித்த நால்வா் கைது
காவிரியில் அனிச்சம்பாளையம் பகுதியில் உள்ள தடுப்பணையில் வெடி வைத்து மீன் பிடித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
மோகனூா் வட்டம், கீழ்பாலப்பட்டியைச் சோ்ந்த நவீன் (23), அஜீத் (28), நத்திஷ் (23), கரூா் மாவட்டம், புன்செய் புகளூரையடுத்த பழனிமுத்து நகா் பகுதியைச் சோ்ந்த நீா்வளத் துறையில் தற்காலிக பணியாளரான கோகுல் (27) ஆகிய நால்வரும் வெடி வைத்து மீன் பிடித்தது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது.
அவா்களிடமிருந்த 20 கிலோ மீன், 10 வாத்துகளை பறிமுதல் செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.