குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
திருநீலகண்டா் குரு பூஜை
63 நாயன்மாா்களில் ஒருவரான திருநீலகண்டருக்கு தை மாத விசாக நட்சத்திரத்தில் நடத்தப்படும் குரு பூஜை திருச்செங்கோடு கைலாசநாதா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
8 ஆம் நூற்றாண்டில்சுந்தரமூா்த்தி நாயனாா் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், 12-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழாா் எழுதிய பெரியபுராணத்திலும் 63 நாயன்மாா்களின் ஒருவரான திருநீலகண்டா் குறித்த குறிப்பு உள்ளது. சிறந்த சிவ பக்தரான திருநீலகண்டருக்கு தை மாத விசாக நட்சத்திரத்தின் போது சிவ தலங்களில் குரு பூஜை செய்யப்படுகிறது. அதன்படி திருச்செங்கோடு கைலாசநாதா் கோயிலில் அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.