‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
ஜன. 26 இல் கிராம சபைக் கூட்டம்
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தையொட்டி ஜன. 26 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி கூறியுள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜன. 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்படும். தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், இணைய வழி வரி செலுத்துதல் சேவை, இணைய வழி மனைப்பிரிவு, கட்டட அனுமதி வழங்குதல், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளன. எனவே, மேற்கண்ட கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.