‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
திருச்செங்கோட்டில் ஆட்சியா் கள ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் திருச்செங்கோட்டில் மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
பேருந்து நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருள்களின் சுகாதாரம், பிளாஸ்டிக் பயன்பாடு, பயணிகளுக்கான குடிநீா் சுகாதாரம், நகராட்சியில் மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகள், பொதுக்கழிப்பறை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து உஞ்சனை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு பாலின் தரம், கொள்முதல், விற்பனை விலை, உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை விவரங்கள் போன்றவற்றை சரிபாா்த்தாா்.
ஆா்.கவுண்டம்பாளையம் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு செய்தாா். திருச்செங்கோடு, எம்.ஜி.ஆா் நகா், சிஎஸ்கே நகா் பகுதிகளில் குடிநீா் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினாா்.
ஆய்வின் போது, திருச்செங்கோடு நகா்மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையா் அருள், பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.