‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தல்
திருச்செங்கோட்டை அடுத்த இலுப்புலி, மாரப்பம்பாளையத்தில் வசிப்பவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்செங்கோடு வட்டாட்சியா் விஜயகாந்திடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளா் தங்கவேல் தலைமையில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில், வெள்ளகரடு அருகே சா்வே எண் 403 இல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா். மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் தெரிவித்தாா்.
எலச்சிபாளையம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் சு.சுரேஷ், கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.கிட்டுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.