செய்திகள் :

விழுப்புரம்: அரங்கத்தை கட்டிப் போட்ட மணம்! - சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தேர்வான 3 அரசிகள்

post image

பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழியாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களை திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இணைந்து தமிழகம் முழுக்க சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது சீசனின் ஆறாவது போட்டி நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விழுப்புரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக விழுப்புரத்தைச் சுற்றியுள்ள அரசூர், இளவனாசூர் கோட்டை, திருக்கோவிலூர், வளவனூர், கோலியனூர், விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டதால் அரங்கம் நிரம்பி வழிந்தது.

டாப் 10-ல் தேர்வானவர்கள்

முதல் சுற்று தேர்வுக்காக கேரட் டிலைட், ஃபிஷ் 65, பேபி பொட்டேட்டோ கிரேவி, கொள்ளு துவையல், பலா பிஞ்சு பிரியாணி, தேங்காய்பால் சாதம், நெத்திலி கருவாடு தொக்கு, வெற்றிலை பாயாசம், தூதுவளை சூப்பு, முடக்கத்தான் தோசை, பிரண்டைத் துவையல், கற்பூரவள்ளி சூப், ஃபிஷ் ரோல், கேரட் பீட்ரூட் ஜெல்லி, பூசணிக்காய் வடிவ கேரட் ஸ்வீட், பிரட் சாசேஜ் கபாப், கத்தரிக்காய் முட்டை வடை, கடாய் கொத்துக்கறி, வாழைத்தண்டு பச்சடி, ரஸ்க் அல்வா, சோளம் கொழுக்கட்டை, சோளம் வடை, கத்தரிக்காய் பிரியாணி, சம்பா ரவை அல்வா, தவளை அடை, புளி இஞ்சி தொக்கு, சாக்லேட் லாவா கேக், மில்க் கேக், நவதானிய கோலா உருண்டை, சென்னாகுன்னி கருவாட்டு கத்திரிக்காய் தொக்கு, கோதுமை ரவா கேசரி, தினை கேசரி, நெய் சாதம், வெந்தைய லட்டு, பெருஞ்சீரக சாதம் போன்றவற்றை செய்து அசத்தியிருந்தனர்.

அதேபோல வந்திருந்த போட்டியாளர்களுக்கும், அவள் விகடன் வாசகிகளுக்கும் ஜாலியான பல்வேறு கலர்ஃபுல் போட்டிகள் வைக்கப்பட்டன. விதமாக சமைத்து எடுத்து வரப்பட்ட அனைத்து உணவுகளையும் சுவைத்த செஃப் தீனா, அதன் செய்முறை குறித்து போட்டியாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதையடுத்து மேடைக்கு வந்த செஃப் தீனா, டாப் 10 தேர்வாளர்களை அறிவிப்பதற்கு முன்பு, 10 பேருக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு பரிசு அளிக்க விரும்புவதாகக் கூறினார்.

சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2

அதன்படி பிரியாணி மற்றும் சிக்கன் கிரேவி  செய்த ஷோபனா, செட்டிநாடு சிக்கன் பிரியாணி மற்றும் முள்ளங்கி ரைத்தா செய்த புனிதா, பெருஞ்சீரகம் புலாவ் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா செய்த ஜெயலட்சுமி, கோலா உருண்டை செய்த பூங்குழலி, ராகி களி மற்றும் கொள்ளு துவையல் செய்த காயத்ரி, புடலங்காய் கூட்டு மற்றும் காரக்குழம்பு செய்த மங்கை, கோதுமை உப்புமா மற்றும் பன்னீர் பட்டர் மசாலா செய்த பவித்ரா, தேங்காய் நெய் சாதம் மற்றும் மட்டன் குருமா செய்த ஆலியா ஹசிபா, முருங்கை துவையல் மற்றும் கரும்பு சாறு அல்வா செய்த குளோரி, சப்ஜி மற்றும் சீஸ் ரோல் செய்த சிம்லா கெரின், வெற்றிலை பாயாசம் செய்த ரம்யா போன்றவர்களுக்கு சக்தி மசாலா, எக்ஸோ, மில்கி மிஸ்க். அஸ்வின் ஸ்வீட் சார்பில் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

அதையடுத்து டாப் 10 தேர்வாளர்களை அறிவித்தவுடன், கைதட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து பனங்கிழங்கு பொடிமாஸ் மற்றும் சங்குப்பூ துவையல் செய்த புவனேஸ்வரி, வெந்தய லட்டு செய்த ஷபானா பேகம், பிரண்டை சாதம் மற்றும் கம்பு களி செய்த இளவேனி, கோதுமை மசாலா கஞ்சி செய்த பிரியா சுந்தரராணி, கருப்பு கவுனி பிரவுனி செய்த சித்ரா, குதிரைவாலி பிரியாணி மற்றும் பாலக் பன்னீர் செய்த சுமதி கோபால், கிரீமி சிக்கன் மற்றும் கொங்குநாடு சிக்கன் வறுவல் செய்த சஹானா, கருப்பு கவுனி லட்டு மற்றும் சோளம் குழி பணியாரம் செய்த சரண்யா, வரகரிசி பொங்கல் மற்றும் சம்பா ரவை கேழ்வரகு களி செய்த அருணா, சாமை மஸ்ரூம் பிரியாணி மற்றும் பேபிகான் பெப்பர் வறுவல் செய்த அபிநயா போன்றவர்களை டாப் 10 தேர்வாளர்களாக அறிவித்தார். அந்த 10 பேருக்கும் சான்றிதழ்களுடன், பரிசுகளையும் வழங்கினார் செஃப் தீனா.

இறுதிச் சுற்றுக்கு தேர்வான சுமதி கோபால், சஹானா, புவனேஸ்வரி

தொடர்ந்து அரங்கத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனித்தனி சமையல் டேபிளில் அந்த 10 பேரும் சமையல் செய்யத் துவங்கினர். சமையல் செய்யத் துவங்கிய 30 நிமிடங்களில், அரங்கமே மணமணத்தது. சுட சுட அவற்றை சுவைத்த செஃப் தீனா, பன்னீர் பொட்டலம் ரைஸ், பூண்டு சாம்பார் தூள், சிக்கன் மற்றும் பன்னீர் திரட்டு செய்த சஹானா, வரகு பிசிபல்லாபாத், தேங்காய் துவையல், பன்னீர் டிலைட், பன்னீர் கிரேவி, பன்னீர் பரோட்டா மற்றும் ரைத்தா செய்த சுமதி கோபால், பன்னீர் புர்ஜி, பாலக்கீரை சப்பாத்தி, சாமை நெய் ரைஸ், மற்றும் சக்கரவள்ளி கிழங்கு பன்னீர் ஃபால் செய்த புவனேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் சென்னையில் நடைபெற உள்ள இறுதிச் சுற்றுக்கு தேர்வானதாக அறிவித்தார்.

சங்குப் பூ துவையல், பனை ஓலை கொழுக்கட்டை...விழுப்புரத்தில் களைகட்டிய சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி!

முதல் போட்டி மதுரையிலும், இரண்டாவது போட்டி தஞ்சாவூரிலும், மூன்றாவது போட்டி திருச்சியிலும், நான்காவது போட்டி ராமநாதபுரத்திலும், ஐந்தாவது போட்டி காரைக்குடியிலும் நடைபெற்ற நிலையில் ஆறாவது போட்டி விழுப்பு... மேலும் பார்க்க

Fake vs Real: போலி பாதாமை கண்டறிவது எப்படி?

தரக் குறைவான பாதாம் அல்லது பாதாமே இல்லாத ஆப்ரிகார்ட், பீச் விதகைகளை சாயம் பூசி பாதாம் என விற்பனை செய்வது பெருகி வருகிறது.தரமான பாதம்களிலிருந்து இவற்றைக் கண்டறிவதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.வடிவம்த... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சமையல் சூப்பர் ஸ்டார் சீஸன்-2 கோலாகலம்; இறுதிப்போட்டிக்குத் தேர்வான நளபாக வித்தகர்கள்!

மாநிலத்தின் நீண்ட கடல் பரப்பைக் கொண்டதும், எண்ணிலடங்கா கடல் வாழ் உயிரினங்கள் வாழும் பகுதியாகத் திகழும் மன்னார் வளைகுடா பகுதியினைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் ராமநாதபுரத்தில் இன்று நடந்த சமையல் சூப்பர் ஸ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: 'பலாக்காய் சுக்கா, கசகசா அல்வா..' - தொடங்கிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீஸன் 2!

உடலுக்கு வலு சேர்க்கும் மண் மனம் மாறாத உணவு வகைகளை மக்கள் மத்தியில்எடுத்துச்செல்லும் வகையில் அவள் விகடன் மாநிலம் முழுவதும் சமையல்சூப்பர்ஸ்டார்போட்டியினை நடத்தி வருகிறது.இந்த போட்டியின் 2-ம்சீசன்தற்போத... மேலும் பார்க்க

Pongal: சர்க்கரைப் பொங்கல் முதல் பல காய்க்குழம்பு வரை... பொங்கல் ரெசிப்பீஸ்!

சர்க்கரைப் பொங்கல் சர்க்கரைப் பொங்கல்தேவையானவை:பச்சரிசி - 200 கிராம் (புதியது)தண்ணீர் - 3 டம்ளர்வெல்லம் - 200 கிராம்தேங்காய்த் துருவல் - கால் கப்முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் (திராட்சை) - தலா 10நெய் - 4... மேலும் பார்க்க

திருச்சி: `7 வயது சிறுவன் டு 80 வயது பாட்டி..!’ - களைகட்டிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்

மலைக்கோட்டை மாநகரமான திருச்சியில் அவள் விகடன் சார்பில் நடத்தப்படும் `சமையல் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சி விமர்சையாக தொடங்கி நடைப்பெற்று முடிந்திருக்கிறது. ராகி புட்டு, சிகப்பு அரிசி பாயசம், பொரிமாவு ஸ்வீ... மேலும் பார்க்க