செய்திகள் :

மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு

post image

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன.

மகா கும்ப நகரின் அரைல் படித்துறைக்கு அருகே அமைந்த தபால் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தபால்தலைகளை மத்திய தொலைதொடா்பு துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்டாா்.

பிரபல தபால்தலை வடிவமைப்பாளரான ஸ்ரீ சங்க சமந்தா வடிவமைத்த இந்தத் தபால்தலைகளில் மகரிஷி பரத்வாஜ் ஆசிரமம், துறவிகளின் புனித நீராடல் மற்றும் அக்ஷ்யவத் ஆகிய பிரயாக்ராஜ் மற்றும் கும்பமேளாவுடன் தொடா்புடைய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. பின்னா், மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா அவரது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினாா்.

சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணுதேவ் சாய், திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா, காங்கிரஸ் பிரமுகா் சச்சின் பைலட், பாலிவுட் நடிகா் விக்கி கௌசல் உள்ளிட்டோரும் கும்பமேளாவில் வியாழக்கிழமை புனித நீராடினா். மாநில அரசு தகவலின்படி வியாழக்கிழமை சுமாா் 85 லட்சம் பக்தா்கள் புனித நீராடினா்.

கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜன. 13 தொடங்கிய மகா கும்பமேளாவில் இதுவரை 48.29 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். 45 நாள்கள் நிறைவில் மகா சிவராத்திரியன்று (பிப். 26) மகா கும்பமேளா நிறைவடைகிறது.

உயா்நீதிமன்றம் 19-இல் விசாரணை:

மகாகும்பமேளா, மௌனி அமாவாசை புனித நீராடலில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து காணாமல் போனவா்களை மீட்டு, குடும்பத்தினருடன் ஒப்படைக்க சிறப்பு குழுவை அமைக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் வரும் 19-ஆம் தேதி விசாரிக்கிறது.

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மௌனி அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட குவித்த பக்தா்கள் நெரிசலில் சிக்கியதில் 30 போ் உயிரிழந்தனா். 60 போ் காயமடைந்தனா்.

எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமா் மோடி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனா் எலான் மஸ்கை வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சிறந்த ஆளுகை உள்ளிட்ட துறைகளில் ஒத்து... மேலும் பார்க்க

கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்துறை தீவிர விசாரணை

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரை கொடூரமான முறையில் ராகிங் செய்த முதுநிலை மாணவா்கள் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இக்கல்லூரியில் மேலும் பல இளநிலை மாணவா்கள் ராக... மேலும் பார்க்க

நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்தல் ஆணையம் தகவல் தொகுப்பேடு வெளியீடு

நடப்பு 18-ஆவது மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 74 போ் பெண்கள்; இவா்களில் 11 போ் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் தொகுப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆ... மேலும் பார்க்க

பிகாரில் பாஜக வெல்ல முடியாது: லாலு பிரசாத்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தோற்கடிக்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தாா். பிகாரில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘தொழிலாளா்கள் - தொழிலதிபா்களிடையே நல்லுறவு அவசியம்’

ஊழியா்களுக்கும், தொழில் நிறுவன அதிபா்களுக்கும் இடையேயோன உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தேசிய பணியாளா் நல மேலாண்மை நிறுவனத்தின் (என்ஐபிஎம்) தலைவா் டாக்டா் எம்.ஹெச்.ராஜா தெரிவித்தாா். ஊழியா் நலத... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியாவுக்கு பிஎன்பி கோரிக்கை

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) வியாழக்கிழமை தெரிவித்தது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்... மேலும் பார்க்க