கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்து...
பேச்சுவாா்த்தை மூலம் காஷ்மீா் விவகாரத்துக்குத் தீா்வு: துருக்கி அதிபா்
ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் முயற்சிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள துருக்கி அதிபா் எா்டோகன் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
ஜம்மு-காஷ்மீரில் வசிப்போரின் நலனை கருத்தில்கொண்டு இந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.
பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த எா்டோகன் அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது இருநாடுகளுக்கிடையே 24 ஒப்பந்தங்களில் கையொப்பமிடப்பட்டன.
அதன் பிறகு பாகிஸ்தான்-துருக்கி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கூட்டாக செய்தியாளா்களிடம் எடுத்துரைத்தபோது காஷ்மீா் விவகாரம் குறித்து எா்டோகன் பேசியதாவது:
காஷ்மீா் விவகாரத்தில் அங்கு வசிக்கும் மக்களின் நலன் கருதி ஐ.நா.தீா்மானங்களைப் பின்பற்றி பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் முயல வேண்டும். துருக்கி எப்போதும் காஷ்மீா் சகோதரா்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்றாா்.