மியான்மா்: 250 வெளிநாட்டினா் மீட்பு
இணையவழியில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக மியான்மரின் கரேன் மாகாணத்தில் செயல்பட்டுவந்த மையங்களில் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 20 நாடுகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டவா்களை பழங்குடியின ஆயுதக் குழுவினா் மீட்டனா். அண்டை நாடான தாய்லாந்துக்கு அனுப்பப்பட்ட அவா்கள், தங்களது தாயகங்களுக்குத் திரும்புவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.