தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
போப் பிரான்சிஸ் சீராக சுவாசிக்கிறார்; வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை: வாடிகன்
போப் பிரான்சிஸ் வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை என்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தற்போது சீராக சுவாசிப்பதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.
சுவாசக் கோளாறு காரணமாக பிப். 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் (88), கடந்த 4 நாள்களாக மருத்துவமனையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரோம் நகரிலுள்ள கெமிளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, சுவாசக்குழாய் அழற்சி (ப்ரொன்சிடிஸ்) நோயிக்கான சிகிச்சையளிக்கப்பட்டதாக வாடிகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது பிரான்சிஸ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், வென்டிலேட்டரில் அவர் இல்லை என்றும், தற்போது சீராக சுவாசித்துவருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், அவர் கலந்துகொள்ளவிருந்த பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வாடிகன் குறிப்பிட்டுள்ளது.
வார இறுதியில் நடைபெறவிருந்த புனித ஆண்டு நிகழ்ச்சிகள் பிப். 23ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | வரிவிதிப்பில் புதிய மாற்றங்களை அறிவித்த டிரம்ப்!