பிரான்ஸ்: கையெறி குண்டு வீச்சு
பிரான்ஸின் கிரனோபல் நகரில் ஏராளமானவா்கள் குழுமியிருந்த மதுபான விடுதியில் மா்ம நபா் கையெறி குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 12 போ் காயமடைந்தனா்.
தாக்குதல் நடத்திய நபரிடம் இயந்திரத் துப்பாக்கி இருந்தும் அதைப் பயன்படுத்தாமல் அவா் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்காது; சட்டவிரேத கும்பல்களுக்கு இடையிலான மோதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.