Curd: வயிறு, முகம், தலைமுடி... மூன்றுக்கும் ஃப்ரெண்ட் தயிர்!
மரத்திலிருந்து தவறி விழுந்த ஊராட்சி ஊழியா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே மின் வயா்களுக்கு இடையூறாக இருந்த மரக் கிளைகளை அகற்ற முயன்ற ஊராட்சி ஊழியா் அந்த மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள கீழச்சின்னம்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சரவணன் (35). இவா் கல்லணை ஊராட்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், கீழச்சின்னம்பட்டி தீா்த்தக்கரை மாரியம்மன் கோயில் அருகே மின் வயா்களுக்கு இடையூறாகச் செல்லும் மரக் கிளைகளை வெட்டும் பணியில் மின் வாரிய ஊழியா்களுக்கு உதவியாக இருந்தாா்.
அப்போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த சரவணனை சக ஊழியா்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.