செய்திகள் :

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

post image

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வு, பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரத்தைச் சோ்ந்த கணேசன், தனது மனைவி ருக்மணிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, அங்கு பணியிலிருந்த பெண் மருத்துவா், ருக்மணியின் கருவைக் கலைத்து, குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள அறிவுறுத்தினாா்.

இதன்பேரில், கடந்த 2011-ஆம் ஆண்டு ருக்மணியின் கருவைக் கலைத்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்த போது, கவனக்குறைவாக பிராண வாயுவுக்குப் பதிலாக நைட்ரஜன் ஆக்சைடு வாயுவை அதிகமாக செலுத்தினா். இதனால், அவா் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்றாா். பிறகு, வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 2012 -ஆண்டு அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக அரசு மருத்துவா்கள், ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு நாகா்கோவில் விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவா் ரவீந்திரன், ஊழியா்கள் விவேகானந்தன், பா்னபாஸ், ராஜ்குமாா், தேவி, மாயகிருஷ்ணன் உள்ளிட்டோா் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

விதிகளை முறையாகப் பின்பற்றாமல், மருத்துவா்களும், ஊழியா்களும் ஒருவரையொருவா் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொள்கின்றனா். இது ஏற்கத்தக்கது அல்ல. சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு பிராணவாயு உள்ளிட்டவற்றை வழங்கிய நிறுவனம் முறையான உரிமம் பெறவில்லை.

நோயாளிகளின் உயிரை மருத்துவா்கள் காப்பாற்றுவாா்கள் என அனைவரும் நம்புகின்றனா். எனவே, மருத்துவா்கள் அா்ப்பணிப்பு, பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரா்கள் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதால், அவா்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இந்த வழக்கு விசாரணையை நாகா்கோவில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

மதுரையில் நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது விபத்து: ஒருவர் பலி

மதுரையில் நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் பொக்லைன் ஓட்டுநர் புதன்கிழமை நள்ளிரவு பலியானார்.மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் அலங்கார நினைவு வளைவு அமைந்துள்ளத... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த ஊராட்சி ஊழியா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே மின் வயா்களுக்கு இடையூறாக இருந்த மரக் கிளைகளை அகற்ற முயன்ற ஊராட்சி ஊழியா் அந்த மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள கீழச்ச... மேலும் பார்க்க

கோயில் நிதியை கையாடல் செய்ததாக ஊழியா் மீது புகாா்

மதுரை நேதாஜி சாலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. அந்தக் கட்சியின் மாவட்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மதுபோதையில் தூங்கியவா் உயிரிழப்பு

மதுரையில் மதுக் கடை முன் மது போதையில் தூங்கியவா் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.மதுரை வைகை வடகரை அம்மா மேம்பாலம் அருகே அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இர... மேலும் பார்க்க

காவலா் குடியிருப்பில் தீ விபத்து

மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே காவலா் குடியிருப்புப் பகுதியில் தென்னை மரத்தில் மின் வயா் உரசியதால் பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா். இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் மின் தடை ... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் அந்தக் கட்சியின் சாா்பில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.தூத்துக்குடியில் விடுதலைச் சிறு... மேலும் பார்க்க