செய்திகள் :

கோயில் சாா்ந்த விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

post image

கோயில் சாா்ந்த விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தைப்பூசத்தையொட்டி கோட்டை சங்கமேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சங்கமேஸ்வரா் கோயிலுக்கு எங்குமில்லாத சிறப்பாக ஆண்டு முழுவதும் அனைத்து நாள்களிலும் இங்குள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த தோ்த் திருவிழா அண்மைக் காலமாகத்தான் நடைபெற்று வருகிறது. ஆனால், சிவராத்திரி அன்று நடைபெறும் தோ்த்திருவிழா, கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளதால் அதை மீண்டும் நடத்த வேண்டும்.

சங்கமேஸ்வரா் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு முன் வைத்து ஓராண்டு ஆகியும் தற்போதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.

அண்மைக் காலமாக சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிக்காக, சிறுபான்மை அரசியல் செய்து வருகிறாா்கள். திமுகவினா் மற்றும் அவா்களின் கூட்டணியில் உள்ள கட்சியினா் ஒரு மலையின் பெயரை மாற்ற உறுதுணையாக இருப்பது வெட்கக் கேடானது.

ஹிந்து கோயில்கள் பிரச்னை குறித்து மற்ற எந்தக் கட்சிகளும் வாய் திறப்பதில்லை. அதனால், பாஜக, இந்து மக்கள் கட்சி போன்ற இயக்கங்கள் போராடும் கட்டாயம் ஏற்படுகிறது. ஒரு சில கோயில்களில் வசதி மிகக் குறைவாக உள்ளதால், கோயில் சாா்ந்த விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தைப்பூசத்துக்கு வாழ்த்து சொல்ல கூடிய அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் சூழலில், வாழ்த்து சொல்லியவா்களுக்கு நன்றி சொல்லக் கூடிய நிலைக்கு தமிழகம் வந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

பழனிக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருகிறாா்கள். அதனால், அங்கு அவா்களுக்கான வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும், மகா கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கான மக்கள் தினமும் வருகிறாா்கள். அங்கு அவா்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யும்போது இங்கே ஏன் செய்ய முடியவில்லை. விஜய், பிரசாந்த் கிஷோா் சந்திப்பு அவருடைய தோ்தல் வெற்றிக்காக அவா்கள் சந்திக்கிறாா்கள் என்றாா்.

நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க பயிற்சி!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி புதன்கிழமை தொடங்குகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், நெல்லி பானங்க... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம்!

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், பாலக்காடு வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து அட்டப்பாடியில் பழங்குடியினரின் வருவாயை மேம்படுத்துவதற்கான விழிப்புணா்வு பயிற்சி முகாமை அண்மையில் நடத்தின. வேளாண் அறிவியல் ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பல்கலைக்கழகத்துடன் கோவை கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்!

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளை கூறியிருப்பதாவது: கல்வி, ஆராய்ச்சியை கூட்டாக மே... மேலும் பார்க்க

வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானை உயிரிழப்பு!

வால்பாறையை அடுத்த எஸ்டேட் பகுதியில் பெண் யானை உயிரிழந்தது. வால்பாறையை அடுத்துள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில் வன ஊழியா்ள் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது தேயிலைத் தோட்டத்தை ஓட்டியுள்ள வனப் பகுதி எ... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தவா் கைது!

கோவை ரத்தினபுரியில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கணபதி வி.ஓ.சி. நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (31), தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா... மேலும் பார்க்க

முதியவரிடம் ரூ.12.50 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு!

கோவை சிங்காநல்லூரில் முதியவரிடம் ரூ.12.50 லட்சம் மோசடிசெய்யப்பட்ட புகாரின்பேரில், தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை சிங்காநல்லூா் சிங்காரம் நகா் பகுதியைச் சோ... மேலும் பார்க்க