புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
காங்கிரஸ் ஓபிசி பிரிவு, எம்எல்ஏ கண்டனம்!
மாத்தூா் தொட்டிப்பால நுழைவு வாயிலில் காமராஜா் படத்துடன்கூடிய கல்வெட்டை சேதப்படுத்தியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவுத் தலைவா் ஆா். ஸ்டூவா்ட் வெளியிட்ட அறிக்கை: காமராஜா் ஆட்சியில் கட்டப்பட்ட இப்பாலம் ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப்பாலம் எனப் பெயா் பெற்றது. நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்லும் இப்பாலத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த காமராஜரின் படம் பொறித்த கல்வெட்டை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனா். இது மிகவும் கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்டோரைக் கண்டறிந்து காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
எம்எல்ஏ கண்டனம்: இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் வெளியிட்ட கண்டன அறிக்கையில், காமராஜரின் படத்துடன் கூடிய கல்வெட்டு உடைக்கப்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடைத்த பாகங்களை காவல் துறையினா், ஊராட்சி ஊழியா்கள் இணைந்து அவசர அவசரமாக அகற்றியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கல்வெட்டை உடைத்த சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.